இந்தியா

Digital Gold வாங்குவோர் எச்சரிக்கையாக இருக்க SEBI அறிவுறுத்தல்! - ஏன் தெரியுமா?

Published On 2025-11-08 17:02 IST   |   Update On 2025-11-08 17:02:00 IST
  • பல பிரபலமான பிராண்டுகள் மற்றும் தளங்கள் டிஜிட்டல் தங்கத்தை தொடர்ந்து வழங்கி வருகின்றன.
  • செபி அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வராது.

Digital Gold, E-Gold தங்கத்தை வாங்குவோருக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லை என்பதால் எச்சரிக்கையாக இருக்க SEBI அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

பத்திரங்கள் அல்லது சரக்கு (Commodity) வர்த்தகப் பொருட்களின் கீழ், டிஜிட்டல் தங்கம் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் ஆதலால் அவை செபி அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வராது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தங்க ஒப்பந்தங்கள் (commodity derivatives), Gold ETFs, Electronic Gold Receipts (EGRs) வழியாக தங்கத்தில் சட்டபூர்வமாக முதலீடு செய்யலாம் என்று செபி அறிவுரை வழங்கியுள்ளது.

செபி அமைப்பு எச்சரிக்கை விடுத்த போதிலும் பல பிரபலமான பிராண்டுகள் மற்றும் தளங்கள் டிஜிட்டல் தங்கத்தை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

குறிப்பாக தனிஷ்க், ஆதித்யா பிர்லா கேபிடல், காரட்லேன், ஜோஸ் அலுக்காஸ், போன்பே மற்றும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவை டிஜிட்டல் தங்கத்தை ஊக்குவிக்கிறது.

Tags:    

Similar News