இந்தியா

விபத்தைக் குறைக்க புதிய பாதுகாப்பு விதிகளை உருவாக்கவேண்டும்: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2025-10-07 15:47 IST   |   Update On 2025-10-07 15:47:00 IST
  • சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தக் கோரி 2012-ல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
  • இந்த வழக்கின் மீதான விசாரணை 13 ஆண்டாக நிலுவையில் இருந்தது.

புதுடெல்லி:

சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தக் கோரி கோவையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரனை கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலை விபத்துகளைக் குறைக்க புதிய பாதுகாப்பு விதிகளை 6 மாதங்களில் உருவாக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

13 ஆண்டாக நிலுவையில் இருந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது குற்ப்பிடத்தக்கது.

Tags:    

Similar News