இந்தியா

நூபுர் ஷர்மா, உச்சநீதிமன்றம்

நூபுர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்

Published On 2022-07-20 00:08 GMT   |   Update On 2022-07-20 00:08 GMT
  • நூபுர் ஷர்மா மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
  • நூபுர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

புதுடெல்லி:

பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் பேசுகையில், நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை பா.ஜ.க. தலைமை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. பல்வேறு நாடுகளும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன. நூபுர் ஷர்மா மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இதற்கிடையே, தன்னை கைது செய்ய தடை விதிக்கவும், பல்வேறு மாநிலங்களில் உள்ள வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் நூபுர் ஷர்மா வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நூபுர் சர்மா உயிருக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறினார்.

இந்நிலையில், நூபுர் சர்மா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ள மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags:    

Similar News