இந்தியா

சீரடி சாய்பாபா கோவில்

சீரடி சாய்பாபா கோவிலுக்கு 175 கோடி ரூபாய் வரிவிலக்கு

Published On 2022-11-26 01:00 GMT   |   Update On 2022-11-26 01:12 GMT
  • ஸ்ரீ சாய்பாபா கோவிலுக்கு, வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
  • கோவில் அறக்கட்டளை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

புனே:

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள சீரடி ஸ்ரீசாய்பாபா கோயில் அறக்கட்டளைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடி வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சீரடி ஸ்ரீ சாய்பாபா கோயில் அறக்கட்டளை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

​​ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் ஒரு அறக்கட்டளை என்று கருதிய வருமான வரித்துறை 2015-16ஆம் ஆண்டுக்கான வரி மதிப்பீடின் போது, நன்கொடையாக பெறப்பட்ட தொகைக்கு 30 சதவீதம் வருமான வரி விதித்தது.

இதற்காக 183 கோடி ரூபாய் வரி செலுத்த வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை அடுத்து அறக்கட்டளை சார்பில், உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரி நிர்ணயம் செய்யப்படும் வரை செலுத்த வேண்டிய வரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இதை ஏற்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானை ஒரு மத அறக்கட்டளையாக ஏற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடிக்கான வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News