இந்தியா

பதவியும், சலுகையும் கொடுத்தால் வாயை மூடிக் கொண்டு இருப்பதா?- பவன் கல்யாண் மீது ரோஜா பாய்ச்சல்

Published On 2025-04-18 10:37 IST   |   Update On 2025-04-18 10:37:00 IST
  • பவன் கல்யாண் திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
  • கோசாலையில் பசுக்கள் ஏன் இறந்து விடுகிறது என தெளிவுபடுத்த வேண்டும்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்து விட்டதாக முன்னாள் திருப்பதி தேவஸ்தான ஆங்காவல குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் கோசாலையில் பசுக்கள் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து முன்னாள் மந்திரி ரோஜா கூறியதாவது:-

எங்காவது ஏதாவது நடந்தால் அதை வெளிப்படையாக பேசி சனாதான தர்மத்தை பாதுகாப்பதாக துணை முதல் மந்திரி பவன் கல்யாண் பேசுகிறார். திருப்பதியில் அநியாயங்கள், தவறான செயல்கள் நடக்கும் போது ஏன் அவர் வாய் திறக்கவில்லை. பவன் கல்யாண் திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தவறு செய்தவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை.

இதுதான் பவனின் நேர்மையா? பதவியும், சலுகையும் கொடுத்தால் அவர் வாயை மூடிக் கொண்டு இருப்பாரா?.

கோசாலையில் பசுக்கள் ஏன் இறந்து விடுகிறது என தெளிவுபடுத்த வேண்டும். ஏழுமலையானுக்கு துரோகம் செய்தால் என்ன நடக்கும் என சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு தெரியும். அவர்கள் அதை அனுபவித்து இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News