இந்தியா
வேலை வழங்குவதற்கு முன்பே ஏழையின் நிலம் அபகரிப்பு: லாலு கட்சியை விமர்சித்த பிரதமர் மோடி
- ராஷ்டிரிய ஜனதா தளம் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது குறித்து யோசிக்கவில்லை.
- ஏழைகளுக்கு வேலை வழங்குவதற்கு முன்னதாக அவர்களின் நிலத்தை பறித்துக் கொண்டது.
பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று அம்மாநிலத்தின் மோரிஹாரி என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது பிரதமர் மோடி "ராஷ்டிரிய ஜனதா தளம் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது குறித்து யோசிக்கவில்லை. ஏழைகளுக்கு வேலை வழங்குவதற்கு முன்னதாக அவர்களின் நிலத்தை பறித்துக் கொண்டது.
ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மக்கள் ஆகியவற்றின் பெயரை வைத்து காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் அரசியில் விளையாட்டு விளையாடுகிறது. தேசிய ஜனநாயக அரசு மீண்டும் ஒருமுறை ஆட்சியமைத்து, புதிய பீகாரை கட்டமைக்கும்" என்றார்.