இந்தியா

பீகாரில் பிரதமர் மோடியின் முதல் பிரசாரமே... தேஜஸ்வி யாதவ் பதிலடி

Published On 2024-04-03 07:37 GMT   |   Update On 2024-04-03 07:37 GMT
  • பீகாரில் பா.ஜனதா, நிதிஷ் குமார் கட்சி, சிராக் பஸ்வான் கட்சி இணைந்து போட்டியிடுகின்றன.
  • காங்கிரஸ், லாலு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ளன.

பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் பாட்டினாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-

பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரங்களில் எப்போதுமே வாரிசு அரசியல் குறித்து பேசுவார். ஆனால், பீகாரில் அவரது முதல் தேர்தல் பிரசாரம், அவரது பேரணி வாரிசு அரசியல்வாதிக்காகவே அமைந்தது. இது மோடி சொல்வது என்ன? அதை எப்படி செயல்படுத்துகிறார் என்ற வேறுபாட்டை காட்டுகிறது" என்றார்.

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது திமுக, காங்கிரஸ் மற்றும் லாலு கட்சி ஆகியவற்றை குடும்ப அரசியல் என கடுமையாக விமர்சனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் பா.ஜனதா, நிதிஷ் குமார் கட்சி, சிராக் பஸ்வான் கட்சி இணைந்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ், லாலு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ளன.

கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 40 இடங்களில் 39-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News