இந்தியா

மத போதகர், குழந்தைகளை எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளி விடுவிப்பு - இந்து அமைப்பு வரவேற்பு

Published On 2025-04-18 08:20 IST   |   Update On 2025-04-18 08:29:00 IST
  • கிறிஸ்தவ மத போதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ்(58), அவரது மகன்கள் பிலிப்(10) மற்றும் டிமோதி(6) ஆகிய 3 பேரை 'ஒரு கும்பல்' உயிருடன் எரித்து கொலை செய்தது.
  • முக்கிய குற்றவாளி தாரா சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் மற்றும் அவரது மகன்களை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த நபர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள மனோகர்பூர் கிராமத்தில் கடந்த 1999 ஜனவரி 21, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ்(58), அவரது மகன்கள் பிலிப்(10) மற்றும் டிமோதி(6) ஆகிய 3 பேரை ஒரு கும்பல் உயிருடன் எரித்து கொலை செய்தது.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மகேந்திர ஹெம்பிராம், தாரா சிங் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளி தாரா சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

மற்றொரு குற்றவாளி மகேந்திர ஹெம்பிராம் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நன்னடத்தை அடிப்படையில் மகேந்திர ஹெம்பிராம் தற்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது 50 வயதாகும் மகேந்திர ஹெம்பிராம், சிறையில் இருந்து வெளிவந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதமாற்றம் தொடர்பான ஒரு சம்பவத்தில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டு 25 ஆண்டுகள் சிறையில் கழித்தேன்" என்று தெரிவித்தார்.

விடுதலை பெற்ற மகேந்திர ஹெம்பிராம்- ஐ வலதுசாரி இந்து முன்னணி அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் மாலை மரியாதையுடன் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமிட்டு உற்சாகமாக வரவேற்றது.  

 

Tags:    

Similar News