இந்தியா

அரிதிலும் அரிதான ஆரஞ்சு நிற சுறா

Published On 2025-08-28 15:08 IST   |   Update On 2025-08-28 15:08:00 IST
  • மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது சுமார் 6 அடி நீளம் கொண்ட இந்த சுறாவை கண்டுபிடித்துள்ளனர்.
  • சுறா தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கொஸ்டாரிகா கடற்கரையில் உள்ள டோர்டுகுரோ தேசிய பூங்காவுக்கு அருகே சமீபத்தில் ஒரு அரிய ஆரஞ்சு நிற சுறா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறத்தில் உள்ள சுறா இதுவரை உலகில் வேறெங்கும் கண்டறியப்படவில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூங்காவுக்கு அருகே 37 மீட்டர் ஆழத்தில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது சுமார் 6 அடி நீளம் கொண்ட இந்த சுறாவை கண்டுபிடித்துள்ளனர். உயிரினங்களில் தோலில் உள்ள கருமையான நிறமிகள் குறையும் போது மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறங்கள் மிகவும் பிரகாசமாக வெளிப்படுகின்றன. இந்த சுறாவுக்கு அதன் வெண்மையான கண்கள் மேலும் தனித்துவத்தை சேர்க்கிறது. இந்த சுறாவுக்கு அல்பினிசம் எனப்படும் மரபணு குறைபாடு காரணமாக இந்த நிறம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சுறாவின் கண்டுபிடிப்பு கடலில் வாழும் உயிரினங்களின் மரபணு மாறுபாடுகள் குறித்து மேலும் ஆய்வு செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அரிய சுறா தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Tags:    

Similar News