இந்தியா

பண்டிகை காலத்தில் பயணம்: 20 சதவீதம் சலுகை அறிவித்த ரெயில்வே அமைச்சகம்..!

Published On 2025-08-09 16:47 IST   |   Update On 2025-08-09 16:48:00 IST
  • அக்டோபர் 13 முதல் 26ஆம் தேதி வரைக்குள் பயணம் செய்ய ரிட்டன் டிக்கெட் உடன் முன்பதிவு செய்தால் 20 சதவீதம் சலுகை .
  • நவம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரைக்கும் இந்த சலுகை தொடரும்.

இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பண்டிகைகள் வந்து கொண்டிருக்கும். இதனால் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பண்டிகை காலங்களாக கருதப்படும். இந்த காலக்கட்டத்தில் ஏராளமானோர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவார்கள்.

ரெயில் பயணிகள் வசதி பெறும் வகையில், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ரிட்டன் பயணம் மேற்கொள்ளும் வகையில் டிக்கெட் எடுத்தால் அதற்கு (ரிட்டன் டிக்கெட்டிற்கு மட்டும்) 20 சதவீதம் சலுகை வழங்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 13 முதல் 26ஆம் தேதி வரைக்குள் பயணம் செய்ய ரிட்டன் டிக்கெட் உடன் முன்பதிவு செய்தால் 20 சதவீதம் சலுகை வழங்கப்படும். அதேபோல் நவம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை ரிட்டன் டிக்கெட் உடன் முன்பதிவு செய்தால் 20 சதவீதம் சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதற்கான முன்வதி வருகிற 14ஆம் தேதி தொடங்கும். தற்போது உள்ள நடைமுறையின்படி 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி என்ற அடிப்படையில் வருகிற 14ஆம் தேதி தொடங்குகிறது.

வழக்கமான பயணத்திற்கான முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் விவரம், ரெயிலில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. அட்வான்ஸ் ரிசர்வேசன் காலம் ரிட்டன் டிக்கெட் செய்வதற்காக 60 நாட்களுக்கு மேல் அவகாசம் வழங்கப்படாது. அந்த 60 நாட்களுக்குள் ரிட்டன் பயணமும் சேர்ந்தால் போன்று இருக்க வேண்டும்.

Tags:    

Similar News