இந்தியா

நடிகை பாலியல் துன்புறுத்தல் புகார்: கட்சி பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எம்.ஏ.

Published On 2025-08-21 14:32 IST   |   Update On 2025-08-21 14:32:00 IST
  • ஓட்டலுக்கு அழைத்ததா நடிகை பரபரப்பு புகார்.
  • கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய மேலிடம் வலியுறுத்தியதால், இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்தவர் ராகுல் மம்கூத்தத்தில். இவர் எம்.எல்.ஏ. ஆகவும் உள்ளார். இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். தன்னை ஓட்டலுக்கு அழைத்ததாகவும், பலகட்டங்களில் மோசமான தகவல்கள் அனுப்பியதாகவும் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

இதனால் கட்சியின் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு, சுயேட்சை எம்.எல்.ஏ. போன்று செயல்படலாம் என கட்சி வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா? என்பது தெரியவில்லை.

ராகுலுக்குப் பதிலாக அபின் வர்கீஸ் மற்றும் கே.எம். அபிஜித் ஆகியோரில் ஒருவர் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படலாம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகை பெயரை வெளியிட மறுத்துவிட்ட நிலையில், பா.ஜ.க ராகுல் மம்கூத்தத்திலுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Tags:    

Similar News