வாக்குகளுக்காக பிரதமர் டான்ஸ் ஆடுவார்: பீகார் பேரணியில் ராகுல் காந்தி கடும் விமர்சனம்- பதிலடி கொடுத்த பாஜக
- பிரதமர் மோடி உங்கள் வாக்குகளை விரும்புகிறார். நீங்கள் டான்ஸ ஆட சொன்னால் ஆடுவார்.
- வாக்காளர்களையும், இந்திய ஜனநாயகத்தையும் கேலி செய்துவிட்டார்- பாஜக.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்கினார்.
முதல் பிரசார கூட்டத்திலேயே பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். பிரதமர் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:-
பிரதமர் மோடி உங்கள் வாக்குகளை விரும்புகிறார். நீங்கள் நரேந்திர மோடியை டான்ஸ ஆட சொன்னால், அவர் டான்ஸ் ஆடுவார். அவர்கள் உங்கள் வாக்குகளை திருடுவதில் ஈடுபட்டுள்ளனர். ஏனென்றால், அவர்கள் இந்த தேர்தலை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள். மகாராஷ்டிரா, அரியானாவில் தேர்தல்களை திருடினார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். பீகாரில் அவர்கள் உங்களுடைய சிறப்பை திருட முயற்சி செய்வார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பாஜக உடனடியாக பதலடி கொடுத்துள்ளது. பாஜக-வின் செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி "ராகுல் காந்தி லோக்கல் குண்டர் போல் பேசுகிறார். பிரதமருக்காக வாக்களித்த அனைத்து மக்களையும் அவமதித்துள்ளார். வாக்காளர்களையும், இந்திய ஜனநாயகத்தையும் கேலி செய்துவிட்டார்" என பதில் கொடுத்துள்ளார்.