இந்தியா
மெஸ்சி மோதும் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் ராகுல் காந்தி
- ராகுல்காந்தி இன்று மாலை 4.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் வந்தடைந்தார்.
- கால்பந்து போட்டி 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடைபெறுகிறது.
ஐதராபாத்தில் இன்று மாலை 7 பேர் பங்கேற்கும் காட்சி கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்சி விளையாடுகிறார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் இதில் ஆடுகிறார்கள். 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும் இந்த போட்டியில் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் பங்கேற்கிறார்.
இதற்காக ராகுல்காந்தி இன்று மாலை 4.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் வந்தடைந்தார்.
இன்றிரவு உப்பல் மைதானத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அணியுடன் மெஸ்ஸியின் அணி நட்பு போட்டி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.