இந்தியா

பீகார் தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் அளிக்கிறது: ராகுல் காந்தி

Published On 2025-11-14 22:44 IST   |   Update On 2025-11-14 22:44:00 IST
  • ஆரம்பம் முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது.
  • தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பாட்னா:

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைவிட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்தது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 30க்கும் அதிகமான தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அங்கு ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில் பீகார் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:

எங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற முடியவில்லை.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இது.

காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் இந்த முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற தங்கள் முயற்சிகளை இன்னும் திறம்படச் செய்யும் என தெரிவித்துள்ளார் .

Tags:    

Similar News