சினிமா செய்திகள்

பிருத்விராஜ் தேச விரோதி.. வலதுசாரி அமைப்புகள் விமர்சனம்!

Published On 2025-03-31 19:06 IST   |   Update On 2025-03-31 19:35:00 IST
  • அதில் உள்ள காட்சிகள் அனைத்தும் கருத்தியல் விஷத்தை பரப்பும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது
  • எம்புரான் உள்பட அவர் நடித்த 'குருதி' முதல் 'ஜன கண மன' படம் வரை தொடர்ந்து பயங்கரவாத சித்தாந்தங்களை நியாயப்படுத்தும் படங்களாகவே உள்ளன.

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி பான் இந்தியா அளவில் வெளியான படம் எம்புரான். கடந்த 2019 இல் வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் இது.

படம் வெளியாதுமுதல் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இப்படத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அதற்கு காரணம் படத்தில் 2002 இல் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற குஜராத் கலவரத்தை மையப்பையடுத்திய காட்சிகளும், வில்லனும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தினால் படத்தின் 17 காட்சிகள் வரை நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. நடிகர் மோகன்லாலும் தனது சமூக ஊடகப் பதிவில் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் படத்தின் இயக்குனரான பிருத்விராஜ் மீது வலதுசாரி அமைப்புகள் வசைமாரி பொலிந்து வருகின்றன.

ஆர்எஸ்எஸ் ஆதரவு பத்திரிகை ஒன்று பிருத்விராஜை தேச விரோதி என்றும் இந்து விரோதி என்றும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளது.

அந்த கட்டுரையில், பிருத்விராஜ் தேச விரோதிகளின் குரலாக உள்ளார். இது எப்போது தெரிய வந்ததென்றால், இது எப்போது தெரியவந்தது என்றால். தீவுகளை நவீனமயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது அதனை வகுப்புவாத கண்ணோட்டத்தில் காண்பிக்கும் விதமாக 'லட்சத் தீவுகளைக் காப்போம்' என்ற பிரசாரத்தை முன்னெடுத்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். சமூக வலைதளங்களிலும் சிஏஏ போராட்டத்துக்கு ஆதரவாகப் பதிவிட்டார்.

எம்புரான் படத்தின் தொடக்கத்தில், காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை என்று குறிப்பிட்டனர். ஆனால், அதில் உள்ள காட்சிகள் அனைத்தும் கருத்தியல் விஷத்தை பரப்பும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிருத்விராஜை விமர்சித்து பாஜக இளைஞர் அமைப்பான ''பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா' மாநில பொதுச் செயலாளர் கணேஷ் தனது பேஸ்புக் பதிவில்,"நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜின் வெளிநாட்டு தொடர்புகள் பற்றி விசாரிக்கவேண்டும். ஆடு ஜீவிதம் படத்திற்கு பின், அவருடைய திரைப்படங்கள் தேசவிரோத கருத்துகளையே பரப்பி வருகின்றன.

எம்புரான் உள்பட அவர் நடித்த 'குருதி' முதல் 'ஜன கண மன' படம் வரை தொடர்ந்து பயங்கரவாத சித்தாந்தங்களை நியாயப்படுத்தும் படங்களாகவே உள்ளன. ஆடுஜீவிதம் படப்பிடிப்பின்போது அவர் ஜோர்டன் நாட்டில் சிக்கிக் கொண்டார். அப்போது, அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

Full View
Tags:    

Similar News