சினிமா செய்திகள்

ஜனநாயகன் விவகாரம்... இதனால் தான் ட்வீட் செய்தேன்... சிலம்பரசன் ஓபன் டாக்..!

Published On 2026-02-05 14:33 IST   |   Update On 2026-02-05 14:33:00 IST
  • அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
  • அவரது அரசியல் பயணத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள்.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் "அரசன்" படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சிலம்பரசன் மூன்று கெட்டப்களில் நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் சமீபத்திய பேட்டியில் ஜனநாயகன் ரிலீஸ் மற்றும் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது பேசிய சிலம்பரசன், "விஜய் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். ஜனநாயகன் என்பது அவரது கடைசிப் படம். அந்தப் படம் வெளியாக வேண்டும், அதனால்தான் நான் ட்வீட் செய்தேன். எனக்கு அரசியல் தெரியாது, அதைப் பற்றிப் பேச நான் சரியான ஆளும் அல்ல. அவரது அரசியல் பயணத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள்," என்றார்.

முன்னதாக ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கு நடைபெற்ற சமயத்தில் நடிகர் சிலம்பரசன் விஜய்-க்கு ஆதரவாக X தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News