இந்தியா

அழுத்தம் அதிகரிக்கலாம்: ஆனால்.., அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு மிரட்டலுக்கு பிரதமர் மோடியின் பதில்..!

Published On 2025-08-25 20:41 IST   |   Update On 2025-08-25 20:42:00 IST
  • நான் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும்.
  • கடைகளுக்கு வெளியே இந்திய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும்.

பிரதமர் மோடி, அவரின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றுள்ளார். அங்கு பல்வெறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மோடிக்கு (தனக்கு) விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், சிறு தொழில்களின் நலன்தான் மிக முக்கியமானவை. அமெரிக்காவின் மிரட்டலால், நமக்கு அழுத்தம் அதிகரிக்கலாம். ஆனால், அனைத்தையும் நாம் தாங்கிக் கொள்வோம்.

காங்கிரஸ் 60 முதல் 65 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தது. அப்போது நாடு மற்ற நாடுகளை சார்ந்திருந்தது. இது ஊழலை இறக்குமதி செய்யவதற்காகத்தான்.

நான் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும். வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு வெளியே இந்திய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும்.

லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ரஷியாவின் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தாவிடில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்டும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

Tags:    

Similar News