இந்தியா

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு!

Published On 2025-07-25 08:39 IST   |   Update On 2025-07-25 08:39:00 IST
  • பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
  • அமித் ஷா மக்களவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குக்கி-ஜோ சமூகங்களிடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 13 அன்று பாஜக முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகு, ஜனாதிபதி ஆட்சி பிப்ரவரி 13, 2026 வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2027 வரை பதவிக்காலம் உள்ள மாநில சட்டமன்றம், அதுவரை செயல்படாமல் இருக்கும்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு ஆகஸ்ட் 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு வன்முறை சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

Similar News