இந்தியா

டெல்லியில் பேரணி- விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு

Published On 2024-12-06 16:02 IST   |   Update On 2024-12-06 16:02:00 IST
  • டெல்லி எல்லையில் ஷம்பு பகுதியில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
  • விவசாயிகளின் போராட்டத்தை ட்ரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

டெல்லி நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டுள்ளது.

விளைபொருட்களுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரி பேரணியாக ஹரியானா, பஞ்சாய் விவசாயிகள் சென்றனர்.

அப்போது, டெல்லி எல்லையில் ஷம்பு பகுதியில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

காவலர்களின் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், விவசாயிகளின் போராட்டத்தை ட்ரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய அமைச்சர் பகீரத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News