இந்தியா

ஒடிசா செல்லும் பிரதமர் மோடி: அரைநாள் விடுமுறை அறிவிப்பு

Published On 2025-06-19 17:27 IST   |   Update On 2025-06-19 17:27:00 IST
  • ஒடிசாவில் மோகன் சரண் மாஜி தலைமையில் ஆட்சி அமைந்து ஒரு வருடம் நிறைவடைகிறது.
  • ஒரு வருட நிறைவு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஒடிசா செல்கிறார்.

மக்களவை தேர்தலுடன் கடந்த வருடம் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மோகன் சரண் மாஜி முதல்வராக பொறுப்பேற்றார். பாஜக ஆட்சியமைத்து ஒரு வருடம் நிறைவடைகிறது.

ஆட்சியமைத்த ஒரு வருடம் நிறைவு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாளை ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் செல்கிறார். இதனைத் தொடர்ந்து மதியத்திற்கு மேல் அரைநாள் விடுமுறை அளித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புவனேஸ்வர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வருவாய் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு 20ஆம் தேதி விடுமறை அளிக்கப்பட்டிருந்தது. புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானதில் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற இருக்கிறது.

பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News