இந்தியா

தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி

Published On 2023-11-25 06:54 GMT   |   Update On 2023-11-25 10:24 GMT
  • பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு சென்றார்.
  • அப்போது அவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.

Tags:    

Similar News