இந்தியா

டொனால்டு டிரம்பின் "டின்னர்" அழைப்பை மறுத்த பிரதமர் மோடி: காரணம் இதுதானாம்..!

Published On 2025-06-20 21:41 IST   |   Update On 2025-06-20 21:41:00 IST
  • இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா சென்றிருந்தேன்.
  • கனடாவில் இருக்கும்போது, டொனால் டிரம்ப் என்னை டெலிபோனில் அழைத்தார்.

பிரதமர் மோடி இன்று ஒடிசா மாநிலம் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா சென்றிருந்தேன். கனடாவில் இருக்கும்போது, டொனால் டிரம்ப் என்னை டெலிபோனில் அழைத்தார். கனடாவில் இருக்கிறீர்கள். வாஷிங்டன் வழியாக வாருங்கள். இரவு உணவு சாப்பிடலாம். பேசாலாம் என அழைப்பு விடுத்தார். மிகுந்த வற்புறுத்தலுடன் தொடர்ந்து அழைப்பு விடுத்தார்.

நான் டிரம்பிடம், உங்களுடைய அழைப்பிற்கு நன்றி. மகாபிரபு நிலத்திற்கு (பூரி ஜெகநாதர் கோவில் உள்ள இடம்) செல்வது எனக்கு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தேன். உங்களுடைய அன்பு (மக்கள்) மற்றும் மகா பிரபு மீதான பக்தி இந்த மண்ணுக்கு என்னை கொண்டு வந்தது.

இவ்வாறு பிரதமர் மோடி விவரித்தார்.

Tags:    

Similar News