இந்தியா

சந்திரயான்-3 ஏவப்படும் இன்றைய நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்- பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2023-07-14 12:59 IST   |   Update On 2023-07-14 13:14:00 IST
  • பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவீட் செய்துள்ளார்.
  • விண்வெளித் துறையில் இந்தியா மிகவும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது.

சந்திரயான்- 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று மதியம் 2.35 மணிக்கு ஏவப்படுகிறது. அது ஆகஸ்ட் 23 அல்லது 24-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான்- 3 ஏவப்படுவதற்கு தயாராகி வரும் நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் விண்வெளித் துறையைப் பொறுத்த வரையில் இன்றைய நாள் (14 ஜூலை 2023) எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சந்திரயான்- 3, நமது மூன்றாவது சந்திரப் பயணமானது, அதன் பயணத்தைத் தொடங்கும். இந்த குறிப்பிடத்தக்க பணி நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்.

சந்திரயான்-3 விண்கலத்தை ஏவுவதன் மூலம் நிலவில் கட்டுப்படுத்தப்பட்ட தரையிறக்கத்தை நிறைவேற்றும் நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.

நமது விஞ்ஞானிகளுக்கு நன்றி. விண்வெளித் துறையில் இந்தியா மிகவும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. சந்திரயான்-1, நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை உறுதிப்படுத்தியதால், உலகளாவிய நிலவுப் பயணங்களில் ஒரு வழித்தடமாக கருதப்படுகிறது. இது உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட அறிவியல் வெளியீடுகளில் இடம்பெற்றது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே சந்திரனின் மேற்பரப்பில் விண்கலத்தை மென்மையாக தரையிறக்கும் சிக்கலான சாதனையை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News