இந்தியா

மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துகள்- பிரதமர் மோடி

Published On 2025-04-14 11:12 IST   |   Update On 2025-04-14 11:12:00 IST
  • புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்.
  • அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும்.

தமிழ் புத்தாண்டு திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தப் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அசாமில் புத்தாண்டு மற்றும் அறுவடை காலத்தை குறிக்கும் போஹாக் பிஹு இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்கள் அனைவருக்கும் போஹாக் பிஹு வாழ்த்துகள்! என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News