இந்தியா

வருகிற 27-ந்தேதி கேரளா வருகிறார் பிரதமர் மோடி

Published On 2024-02-16 09:45 IST   |   Update On 2024-02-16 11:59:00 IST
  • சுரேஷ் கோபியின் மகள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
  • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை நான் நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன்.

திருவனந்தபுரம்:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம், மக்கள் சந்திப்பு போன்றவற்றை தொடங்கி விட்டன. பிரதமர் மோடியும் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

தென் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தும் வகையில் அவர் இங்கு அடிக்கடி பயணம் செய்து வருகிறார். கேரள மாநிலத்திற்கு கடந்த மாதம் வந்த அவர் ரோடு ஷோ, நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் மகள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் மீண்டும் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி கேரளா வருகிறார். மாநில பாரதிய ஜனதா தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடைபெறும் பாத யாத்திரையின் நிறைவு விழா கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக மாநில பாரதிய ஜனதா தலைவர் சுரேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை நான் நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்த நடைபயணம் வருகிற 27-ந்தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைகிறது. இதன் நிறைவு விழா மத்திய விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் கேரளா வருகிறார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News