இந்தியா
டெல்லியில் ரூ.11 ஆயிரம் கோடியில் நெடுஞ்சாலை திட்டங்கள்: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
- நொய்டாவில் இருந்து டெல்லி விமான நிலையம் வரையிலான விரைவு சாலை இந்த திட்டங்களில் அடங்கும்.
- டெல்லியின் புறநகர் பகுதிகளை இணைக்கும் 76 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையும் திறந்து வைக்கப்படுகிறது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி டெல்லியில் நாளை ரூ.11 ஆயிரம் கோடியில் 2 பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைக்கிறார். டெல்லி ரோகினி பகுதியில் மதியம் 12.30 மணியளவில் பிரதமர் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
துவாராகா விரைவு சாலையின் டெல்லி பகுதியையும், நகர்புற விரிவாக்கம் சாலை-2 திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
நொய்டாவில் இருந்து டெல்லி விமான நிலையம் வரையிலான விரைவு சாலை இந்த திட்டங்களில் அடங்கும். டெல்லி-என்.சி.ஆர். இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த விரைவு சாலை திறக்கப்படுவதால் நொய்டாவில் இருந்து விமான நிலையத்தை 20 நிமிடத்தில் சென்றடையலாம். டெல்லியின் புறநகர் பகுதிகளை இணைக்கும் 76 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையும் திறந்து வைக்கப்படுகிறது.