இந்தியா

வெள்ள சேதங்களை பார்வையிட நாளை உத்தரகாண்ட் செல்கிறார் பிரதமர் மோடி

Published On 2025-09-10 20:52 IST   |   Update On 2025-09-10 20:52:00 IST
  • உத்தரகாசியில் ஆகஸ்ட் 5-ம் தேதி திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் அதிதீவிர மழை பெய்தது.
  • இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

புதுடெல்லி:

உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் கடந்த 5ம் தேதி திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் அதிதீவிர மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதற்கிடையே சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி நாளை செல்கிறார். மாலையில் தலைநகர் டேராடூன் செல்லும் அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார். அதன்பின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

காலையில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்துடன் ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News