இந்தியா

கோவாவில் இன்று 77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Published On 2025-11-28 03:53 IST   |   Update On 2025-11-28 03:53:00 IST
  • மடத்தின் 550-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 77 அடி உயர ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
  • சிலை திறக்கும் நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பனாஜி:

கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று பிற்பகலில் 77 அடி உயர ஸ்ரீராமர் சிலையை திறந்து வைக்கிறார். இதையடுத்து, பக்தர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான தரிசனம் மற்றும் சபா காரியக்ரமம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், மடத்தின் 550-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 77 அடி உயர ராமர் சிலை திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் ஸ்ரீராமரின் சிலையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News