இந்தியா
கோப்புப்படம்
மே 30-இல் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி - 2 நாட்கள் தியானம் செய்யவுள்ளதாக தகவல்
- விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்.
- பயணத்தின் போது கேதார்நாத் சிவன் கோவிலில் வழிபாடு செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்.
முன்னதாக 2019 பாராளுமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவின் போது பிரதமர் மோடி இமய மலை பயணம் செய்தார். அங்குள்ள குகை ஒன்றுக்கு சென்ற பிரதமர் மோடி தியானம் செய்தார். இந்த பயணத்தின் போது கேதார்நாத் சிவன் கோவிலில் வழிபாடு செய்தார்.
இந்த நிலையில், தற்போது பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து பிரதமர் மோடி தென் தமிழகம் வரவிருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது.