இந்தியா

அணு ஆயுத மிரட்டலுக்கு புதிய இந்தியா அஞ்சாது: பிரதமர் மோடி

Published On 2025-09-17 17:52 IST   |   Update On 2025-09-17 17:52:00 IST
  • துணிச்சலான ஆயுத படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தது.
  • பயங்கரவாதிகளை தங்கள் சொந்த மண்ணில் இந்தியா எதிர்த்து போராடும்.

போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் என்னை ஆசீர்வதித்து வருகின்றனர்.

புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சாது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் சிந்தூரத்தை அகற்றினர். நாங்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம்.

நமது துணிச்சலான ஆயுத படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தது. பயங்கரவாதிகளை தங்கள் சொந்த மண்ணில் இந்தியா எதிர்த்து போராடும்.

பயங்கரவாதிகளை அவர்களின் சொந்த வீடுகளுக்குள் தாக்கும் புதிய இந்தியா இது. ஒவ்வொரு குடிமகனும் நாட்டிற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

140 கோடி இந்தியர்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர் என தெரிவித்தார்.

Tags:    

Similar News