இந்தியா

அடுத்த மாதம் ஆந்திரா வருகிறார் பிரதமர் மோடி

Published On 2025-04-18 10:39 IST   |   Update On 2025-04-18 10:39:00 IST
  • சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பிரதமர் மோடி கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கிறார்.
  • பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆந்திர அரசு அமைச்சர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் அமராவதியில் ரூ.65 ஆயிரம் கோடியில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.

அதன்படி பிரதமர் மோடி மே மாதம் 2-ந்தேதி மாலை 4 மணிக்கு அமராவதி வருகிறார். சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பிரதமர் மோடி கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் நடந்து வருகிறது. இந்த விழாவில் குண்டூர், கிருஷ்ணா, பிரகாசம், மேற்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆந்திர அரசு அமைச்சர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News