இந்தியா

டெல்லியில் ''பாரத் டெக்ஸ்-2024'' கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Published On 2024-02-26 12:13 IST   |   Update On 2024-02-26 12:13:00 IST
  • பாரத் டெக்ஸ் -2024 சர்வதேச ஜவுளி கண்காட்சி டெல்லியில் இன்று தொடங்கியது.
  • பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

புதுடெல்லி:

பாரத் டெக்ஸ் -2024 சர்வதேச ஜவுளி கண்காட்சி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் முன்னிலை வகித்தார்.

மத்திய ஜவுளி வர்த்தக அமைச்சகம் சார்பில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் வர்த்தக மையத்தில், 'பாரத் டெக்ஸ் - 2024' இன்று தொடங்கி மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியில், நாடு முழுவதுமுள்ள ஜவுளித்துறையினர் தங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர்.

பஞ்சு முதல் ஆடைகள் வரை அனைத்து உற்பத்தி நிலை நிறுவனங்களும், தங்கள் உற்பத்தி திறனை வெளிப்படுத்த இது வாய்ப்பாக அமைந்துள்ளது. ஜவுளித்துறை சார்ந்த இயந்திர உற்பத்தி நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

இதில் திருப்பூரைச் சேர்ந்த 50-க்கு மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News