இந்தியா

திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Published On 2023-04-25 11:23 IST   |   Update On 2023-04-25 12:10:00 IST
  • விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர்.
  • கேரளாவில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடப்பட்டதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று கேரளா வந்தார்.

கொச்சியில் ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் மோடி இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கேரள மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே விரைவில் கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்றார்.

இந்நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் கொச்சியில் தங்கிய அவர், இன்று காலை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.

விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின்பு அவர் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு சென்றார்.

அங்கு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News