பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி உயர்மட்ட கூட்டம் .. சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை
- சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
- செழிப்பை ஊக்குவிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடி தனது இல்லத்தில் இன்று மாலை பொருளாதார வல்லுநர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இதில், இந்தியாவின் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அனைத்து துறைகளிலும் விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்வாதாரததிற்காக வழிவகை, வாழ்க்கை முறை வணிகம், தொழில் செய்வதை எளிமைப்படுத்துவதற்கும் செழிப்பை ஊக்குவிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பொருளாதார வல்லுனர்களுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.