எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
- எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
- அவரது மறைவால் மிகுந்த வருத்தம் அடைகிறேன்.
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவை ஒட்டி அரசியல் தலைவர்கள், பொது மக்கள் மற்றும் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், பிரதமர் நரேந்திர மோடி, எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "எஸ்.எம். கிருஷ்ணா அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க தலைவர். மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் எப்போதும் அயராது உழைத்தார். கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்ததற்காக, குறிப்பாக உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அவர் கவனம் செலுத்தியதற்காக அவர் அன்புடன் நினைவு கூறப்படுகிறார். எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு சிறந்த வாசகர் மற்றும் சிந்தனையாளர்."
"பல ஆண்டுகளாக ஸ்ரீ எஸ்.எம். கிருஷ்ணா ஜியுடன் தொடர்பு கொண்டு உரையாட எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். அவரது மறைவால் நான் மிகுந்த வருத்தம் அடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் அவரை பின் தொடர்வோருக்கும் எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி," என்று குறிப்பிட்டுள்ளார்.