இந்தியா
இமாச்சல பிரதேசத்தில் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து- வினாத்தாள் கசிவு எதிரொலி
- 10-ம் வகுப்புக்கான ஆங்கில தேர்வு நேற்றும், 12-ம் வகுப்புக்கு இன்றும் நடைபெறுவதாக இருந்தது.
- 10-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளுக்கு பதிலாக, 12-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் பார்சலை ஆசிரியர்கள் தவறுதலாக திறந்து விட்டனர்.
தர்மசாலா:
இமாச்சல பிரதேசத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு நடந்து வருகிறது. இதில் 10-ம் வகுப்புக்கான ஆங்கில தேர்வு நேற்றும், 12-ம் வகுப்புக்கு இன்றும் (சனிக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது.
இதில் சம்பா மாவட்டத்தின் சொவாரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் நேற்று 10-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளுக்கு பதிலாக, 12-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் பார்சலை ஆசிரியர்கள் தவறுதலாக திறந்து விட்டனர்.
இதனால் 12-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே இன்றைய 12-ம் வகுப்பு ஆங்கில தேர்வை ரத்து செய்து மாநில அரசு அறிவித்து உள்ளது.