இந்தியா
நேபாளம் வழியாக ஐதராபாத் வந்த பாகிஸ்தான் வாலிபர் கைது
- பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் பணியில் தெலுங்கானா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
- போலீஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகரி:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் பணியில் தெலுங்கானா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. பாகிஸ்தானியர்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் மீது மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.
இந்தநிலையில் ஐதராபாத்திற்கு வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். முகம்மத் பயாஸ் என்ற வாலிபர் ஐதராபாத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மனைவியை சந்திப்பதற்காக பயாஸ் இந்தியாவிற்கு எந்தவித விசாவும் இல்லாமல் நேபாளம் வழியாக ஐதராபாத் வந்துள்ளார்.
பயாசை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.