இந்தியா

வான்பரப்பை மூடிய பாகிஸ்தான்.. ஆண்டுக்கு ரூ.5000 கோடியை இழக்கும் ஏர் இந்தியா

Published On 2025-05-02 12:05 IST   |   Update On 2025-05-02 12:05:00 IST
  • இரு நாடுகளும் தங்கள் நாட்டின் வான்வழியை பயன்படுத்தத் தடை விதித்துள்ளன.
  • பாதிக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டும்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் ராஜாங்க ரீதியிலான தடைகளை விதித்துள்ளன. இந்த தடைகளால் இருநாடுகளின் பொருளாதாரத்திலும் பாதிப்புகள் ஏற்படுகிறது.

இரு நாடுகளும் தங்கள் நாட்டின் வான்வழியை பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. இதனால் விமான நிறுவனங்கள் அதிக எரிபொருள் செலவுகளைச் சந்திக்கின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் வான்வெளியில் தடை ஒரு வருடத்திற்கு தொடர்ந்தால் ஏர் இந்தியா சுமார் 600 மில்லியன் டாலர்களை (ரூ.5000 கோடி) இழக்கும். தடை நீடிக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.5000 கோடி இழக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா குழுமம் இழப்பீடு கோரி அரசாங்கத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், பாதிக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் நிலைமை சரியானபிறகு மானியங்களைத் திரும்பப் பெறுமாறும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News