இந்தியா
இந்தியாவில் பாகிஸ்தான் மந்திரியின் எக்ஸ் தள கணக்கு முடக்கம்
- பாகிஸ்தானை சேர்ந்த பலரின் எக்ஸ் தள பக்கங்கள், யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த போவதாக உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்து இருந்தார்.
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த பலரின் எக்ஸ் தள பக்கங்கள், யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் வலை தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் மீது அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்த போவதாக பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.