இந்தியா
பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்க வேண்டும் - ஒவைசி ஆவேசம்
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டமைப்பை முற்றிலும் அழிக்க வேண்டும்.
- பயங்கரவாதிகளுக்கு துணை போகும் பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்க வேண்டும்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 9 இலக்குகள் மீது இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இரவு முழுவதும் துல்லியமாக தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவரும்,எம்.பி.யுமான ஒவைசி பாராட்டு தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய ஒவைசி, "பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டமைப்பை முற்றிலும் அழிக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு துணை போகும் பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்க வேண்டும் என்பது அவசியம். மீண்டும் ஒரு பஹல்காம் தாக்குதல் போன்ற மற்றொரு தாக்குதல் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.