இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சி குழுவில் யூசுப் பதான் அவுட்.. அபிஷேக் பானர்ஜி இன் - மம்தா ஹேப்பி

Published On 2025-05-20 16:13 IST   |   Update On 2025-05-20 16:13:00 IST
  • இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.
  • அபிஷேக் பானர்ஜி மம்தாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பொய்களை பரப்புவதாக மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இதனால் உலக நாடுகளுக்கு இதை எடுத்துக்கூறும் வகையில் மத்திய அரசு 7 எம்பிக்கள் தலைமையில் அனைத்து கட்சி குழுவை அமைத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் இந்த குழுவில் உள்ளனர்.

அதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரரும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான யூசுப் பதான் இடம்பெற்றிருந்தார்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பியான சஞ்சய் குமார் ஷா தலைமையிலான குழுவில் யூசுப் பதான் இடம்பெற்றிருந்தார். இந்த குழுவினர் இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர். இந்நிலையில் தான் யூசுப் பதான் அந்த குழுவுடன் சேர்ந்து செயல்படமாட்டார்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசிக்காமல் மத்திய அரசு தேர்வு செய்துள்ளது என்றும், இதனால் குழுவில் இருந்து தனது கட்சி மொத்தமாக விலகுவதாவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார். ஆனால் அரசாங்கம் தன்னைத் தொடர்பு கொண்டால் அதைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.

இதையடுத்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, திருமதி பானர்ஜியை அழைத்து, அவரை சமாதானப்படுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தான் யூசுப் பதானுக்கு பதிலாக அபிஷேக் பானர்ஜி குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். அபிஷேக் பானர்ஜி மம்தாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திரிணாமுல் காங்கிரசின் பொதுச்செயலாளரும் ஆவார். 

Tags:    

Similar News