ஆபரேஷன் சிந்தூர் கற்பனையிலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத தாக்குதல்- ராஜ்நாத் சிங் பெருமிதம்
- ஆபேரஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானில் அப்பாவி மக்கள் யாரையும் குறிவைத்து தாக்கவில்லை.
பாகிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மிகத்துல்லியமாக குறிவைத்து பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அப்பாவி மக்கள் யாரையும் குறிவைத்து தாக்கவில்லை. பாகிஸ்தானின் சொந்த மண்ணுக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவ தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் துல்லியமாக பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டன.
அதிநவீன போர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் என்பது கற்பனையிலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத தாக்குதல். கற்பனைக்கு எட்டாத வகையில் மிகத்துல்லியமாக குறிவைக்கப்பட்டு பயங்கரவாதிகளின் முகாம்கள் தாக்கப்பட்டது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.