இந்தியா
ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது: ராணுவ தயார் நிலை மிக உயர்ந்த அளவில் இருக்க வேண்டும்- தலைமை தளபதி அனில் சவுகான்
- 365 நாளும், 24/7 என்ற அடிப்படையில் அதிக அளவிலான ராணுவ தயார் நிலை இருக்க வேண்டும்.
- வளர்ந்து வரும் போர்ச்சூழலில் ராணுவ வீரர்களுக்கு தகவல், தொழில்நுட்பம், அறிவு ஆகிய மூன்று தேவை.
இந்திய பாதுகாப்புப்படை தலைமை தளபதி அனில் சவுகான் டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. ஆண்டு முழுவதும், அதாவது 365 நாளும், 24/7 என்ற அடிப்படையில் அதிக அளவிலான ராணுவ தயார் நிலை இருக்க வேண்டும். வளர்ந்து வரும் போர்ச்சூழலில் எதிர்கால ராணுவ வீரர்களுக்கு தகவல், தொழில்நுட்பம், அறிவு ஆகிய மூன்று தேவை.
ஒரு போரில் இரண்டாம் இடம் பெறுபவர்கள் யாரும் இல்லை. எந்தவொரு ராணுவமும் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். அதிக அளவிலான செயல்பாட்டுத் தயார் நிலையை பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அனில் சவுகான் தெரிவித்தார்.