3 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் பாடம்
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
- இந்த சிறப்பு பாடத்தொகுதி 2 பகுதியாக உருவாக்கப்படுகிறது.
புதுடெல்லி:
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன் மகத்துவத்தை மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன? என்பதையும், தேசிய பாதுகாப்பில் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எவ்வாறு பங்கு வகிக்கின்றன? என்பதையும் மாணவர்களுக்குப் புரிய வைக்கும் நோக்கில் இது தயாரிக்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்த சிறப்பு பாடத்தொகுதி 2 பகுதியாக உருவாக்கப்படுகிறது. இதில் 3 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பகுதியும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றொரு பகுதியும் இருக்கும் என்றும் அவை மேலும் தெரிவித்தன.