இந்தியா

கேரளாவில் ஆபரேசன் `டி' வேட்டை: ரூ.7 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்- 149 பேர் கைது

Published On 2025-04-06 11:34 IST   |   Update On 2025-04-06 11:34:00 IST
  • ஆபரேசன் ‘டி’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை.
  • தலைமறைவான குற்றவாளிகள் 1501 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் போதைப் பொருள் பயன்படுத்து பவர்கள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் அதனை கட்டுப்படுத்த அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஆபரேசன் 'டி' என்ற பெயரில் மாநிலம் முழு வதும் கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. எம்.டி.எம்.ஏ., ஹெராயின், மெத்தம்பேட்டமைன், பிரவுன் சுகர், நைட்ரஸெபம் மாத்திரைகள், கஞ்சா, கஞ்சா சாக்லெட்டுகள், எரிசாராயம் என பல்வேறு வகையிலான போதை வஸ்துகள் போலீசாரின் வேட்டையில் சிக்கின.

மாநிலம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 9 லட்சம் ஆகும். இது தொடர்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர கலால் துறை தொடர்பான வழக்குகளில் தலைமறைவான குற்றவாளிகள் உள்பட1501 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News