இந்தியா
திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி.. ஏற்கனவே உள்ளவர்கள் இடமாற்றம் - சந்திரபாபு நாயுடு
- திருப்பதி கோவிலில் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
- அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்களைக் கட்டுவோம்.
திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
திருப்பதி கோவிலில் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திருமலை கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது வேலை செய்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள்.
பக்தர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் இறைவனைக் காணும் வாய்ப்பைப் பெறும் வகையில், அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்களைக் கட்டுவோம்.
திருமலையின் புனித மலைகளைச் சுற்றி எந்த வணிக நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது. இங்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்தார்.