இந்தியா

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமை: கடனை அடைக்க தாய் நகையை திருடிய வாலிபர்- தடுத்ததால் அடித்து கொன்ற கொடூரம்

Published On 2025-10-06 19:11 IST   |   Update On 2025-10-06 19:11:00 IST
  • ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானதால் கடன்மேல் கடன் வாங்கியுள்ளார்.
  • கடன் கழுத்தை நெரித்ததால், அம்மாவின் நகைகளை திருடும்போதும் மாட்டியதால் கொலை.

உத்தர பிரதேச மாநலத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 20 வயது வாலிபர், லோன் ஆப் மூலம் கடன்மேன் கடன் வாங்கியதால் நெருக்கடிக்கு உள்ளாகி தாயின் நகையை திருடியபோது மாட்டிக்கொண்டதால், தாயையே அடித்துக் கொலை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உ.பி.யில் உள்ள பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த காலி என்ற பகுதியில் வசித்து வரும் வாலிபர் நிகில் யாதவ் என்ற கொலு. இவர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். Aviator என்ற ஆன்லைனில் பணம் கட்டி விளையாடியுள்ளார். பணத்தை இழக்க இழக்க கடன் வழங்கம் ஆன்லைன் செயலிகளில் (M Pokket, Flash Wallet, RAM Fincorp) கடன் பெற்றுள்ளார். அந்த செயலில் வட்டி மற்றும் மறைமுக கட்டணம் என அதிகமாக தொகை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

பணம் செலுத்த வழியில்லாததால் தாயின் நகையை திருடி, அதை விற்று பணத்தை செலுத்த முயற்சி செய்துள்ளார். நகையை திருடும்போது, தாய் கையும் களவுமாக பிடித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர், இந்த கொலை கொள்ளை சம்பவத்தால் நடைபெற்றது என நாடகம் ஆடுவதற்காக, வீட்டில் உள்ள பொருட்களை அங்கும் இங்குமா தூக்கி வீசியுள்ளார். பின்னர் தனது தந்தைக்கு போன் செய்து, மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை அடித்தனர். அப்போது என்னை தாக்கிவிட்டு, அம்மாவை கொலை செய்து விட்டு ஓடிவிட்டனர் எனக் கூறியுள்ளார்.

தந்தை இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் நிகில் யாதவிடம் தொடர் விசாரணை நடத்தும்போது, உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது கொலை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News