இந்தியா

ஜி20 சிறப்பு விருந்தில் மல்லிகார்ஜூன கார்கேவை அழைக்காதது தவறு- சித்தராமையா

Published On 2023-09-09 09:06 GMT   |   Update On 2023-09-09 10:34 GMT
  • ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று இரவு சிறப்ப விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர், ஜார்க்கண்டு முதல்வர் உள்பட பலர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

ஜி20 அமைப்பில் 18வது உச்ச மாநாடு இன்று டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் தொடங்கியது.

நாளை வரை நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி பாரத் மண்டபத்தில் கை குலுக்கியும், கட்டி அணைத்தும் வரவேற்பு அளித்தார்.

ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று இரவு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த விருந்தில், உலக தலைவர்களை தவிர இந்திய மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர், ஜார்க்கண்டு முதல்வர் உள்பட பலர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சிறப்பு விருந்திற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்கு காங்கிரசும், ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கர்நாடகா மாநிலம் ஹூப்பளியில் முதலமைச்சர் சித்தராமைய்யா கூறுகையில், " கார்கே காங்கிரஸ் தலைவர் மட்டுமல்ல, மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவரும் கூட. என்னை பொறுத்தவரையில் கார்கேவை அழைக்காதது தவறு. எனக்கும் பிற வேலை இருப்பதால் ஜி20 மாநாட்டின் விருந்துக்கு நானும் கலந்துக் கொள்ளவில்லை" என்றார்.

Tags:    

Similar News