இந்தியா

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை...! நண்பனும் இல்லை...! அஜித் பவார்

Published On 2023-08-28 02:07 GMT   |   Update On 2023-08-28 02:07 GMT
  • ஏக்நாத் ஷிண்டே அரசில் இணைந்தது மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்காக...
  • அனைத்து மக்களையும் பாதுகாப்பதுதான் எங்களது பணி

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கி தனி கோஷ்டியாக செயல்படும் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பீட்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அஜித் பவார், பேசியபோது "நாங்கள் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அரசில் இணைந்தது, மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகத்தான். நாங்கள் இந்த முடிவை மாநில வளர்ச்சிக்காக எடுத்தோம்.

அரசியலில், நிரந்தர எதிரியும் கிடையாது. நண்பனும் கிடையாது. நாங்கள் மகாயுதி கூட்டணியில் உள்ளோம். எங்களுடைய பணி அனைத்து சாதி மற்றும் மத மக்களை காப்பாற்றுவதுதான். இதை மகாராஷ்டிர மாநிலத்தை ஒவ்வொருவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.

நாங்கள் விவசாயிகளின் நலனுக்காக பணிபுரிவோம். நிலத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. நீர்வளத்துறை மந்திரியாக இருக்கும்போது இதற்கான ஏராளமான பணிகளை செய்துள்ளேன்" என்றார்.

Tags:    

Similar News