நக்சல்களைக் கொல்வதில் மகிழ்ச்சியில்லை - சத்தீஸ்கரில் அமித் ஷா வெளியிட்ட விருப்பம்
- உங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, மைய நீரோட்டத்தில் சேருங்கள்.
- வளர்ச்சிக்கு நமக்குத் தேவை துப்பாக்கிகள் அல்ல, கணினிகள்.
சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்திற்கு பழங்குடி கலாச்சார நிகழ்வான பஸ்தர் பந்தமின் நிறைவு விழாவவில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில அவர் பேசியதாவது, பஸ்தரில் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் நடந்த காலம் போய்விட்டது. இன்றும் கூட, ஆயுதம் ஏந்திய அனைத்து நக்சலைட் சகோதரர்களுக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, மைய நீரோட்டத்தில் சேருங்கள்.
நீங்கள் எங்களில் ஒருவர். ஒரு நக்சலைட் கொல்லப்படும்போதெல்லாம், யாரும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஆனால் இந்தப் பகுதி வளர்ச்சியை விரும்புகிறது. சரணடைந்த நக்சலைட்டுகள், வளர்ச்சிக்கு நமக்குத் தேவை துப்பாக்கிகள் அல்ல, கணினிகள் என்றும், பேனாக்கள் தேவை IEDகள் அல்லது குண்டுகள் அல்ல என்றும் புரிந்துகொள்கிறார்கள்.
2025 ஆம் ஆண்டில், மூன்று மாதங்களில் 521 நக்சலைட்டுகள் சரணடைந்தனர், கடந்த ஆண்டு 881 பேர் சரணடைந்தனர். இன்னும் ஆயுதங்களை வைத்திருக்க விரும்புபவர்களை ராணுவம் கையாளும். என்ன நடந்தாலும், அடுத்த மார்ச் மாதத்திற்குள் முழு நாடும் நக்சல்களிடமிருந்து விடுபடும்" என்று அமித் ஷா கூறினார்.